எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் நேற்று(02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, காரைநகர் கடற்பரப்பில் வைத்து ஐஎன்டி/பிவை/பிகே/எம்எம்/979 என்ற இலக்கத்தைக் கொண்ட ஒரு படகுடன் 11 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *