மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச செயலக மாநாட்டு மண்பத்தில் நடைபெற்றது.
சர்வதேச புகைத்தல் எதிர்ப்புக் கொடி தினத்தின் மூலம் பெறப்பட்ட நிதியிலிருந்து 150 சிறுவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளும், 100 சிறுவர்களுக்கு பாதணிகளும், 100 சிறுவர்களுக்கு புத்தகப் பைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திரு.கே.உதயகுமார், மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி. சியாந்தினி கமல்ராஜ், கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு. எஸ்.தேவராஜா, சமூக அபிவிருத்தி உதவியாளர் திரு.தெ.உதயசுதன், சமுதாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பி.ஜசோபனா, பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு தலைவர் திருமதி.தயானந்தி சுஜீவன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், சிறுவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

