சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிமின் வழிகாட்டுதலின் கீழ், மழைக்காலங்களில் நீர் தடையின்றி வடிந்து ஓடுவதற்காக வடிகான்களில் படிந்து கிடந்த மண் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு, மழைநீரால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் விரைவாக செயல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் தனது 6-ஆவது வட்டாரத்தில் தொடர்ச்சியாக மக்களுக்காக தன்னால் முடிந்த சேவைகளை செய்து வருவதோடு, மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் என்ன என்பதை நேரடியாக அறிந்து கொள்ளும் நோக்கில் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் தனது வட்டாரத்திற்கு விஜயம் செய்து, மக்களோடு கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றார்.

