மட்டக்களப்பில் 14 வயது சிறுமியான மகளின் மீது தாக்குதல் நடத்திய தந்தை கைது

போதைப்பொருள் வாங்குவதற்குப் பணத் தேவைக்காக 14 வயது சிறுமியான மகளின் கையில் இருந்த தங்க வளையலைக் கழட்டித் தருமாறு அடித்து தாக்கியதில் சிறுமி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தந்தையை கைது செய்து பின்னர் எச்சரித்து விடுவித்த சம்பவம் நேற்று முன்தினம்(05) காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாவிலங்குதுறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இது பற்றி தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள நிலையில் அதனை வாங்குவதற்குப் பணம் இல்லாததையடுத்து 14 வயது சிறுமியான அவரது மகளின் கையில் இருந்த 3 பவுண் நிறை கொண்ட தங்க வளையலை கழட்டிது தருமாறு கோரியுள்ளார்.

 

இதனையடுத்து குறித்த சிறுமி அதனைக் கழட்டிக் கொடுத்ததையடுத்து சிறுமியை அடித்து தாக்கியதில் சிறுமி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதுடன் இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்ய சென்ற போது பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அவரை கைது செய்தனர்.

 

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொலிஸாரிடம் கோரியதை அடுத்து கைது செய்தவரை பொலிஸார் எச்சரித்து விடுவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *