மழை, காற்றினால் மின்சார தடை ஏற்படும்; மக்கள் தங்களை தயார்படுத்தவும் – அரசாங்க அதிபர்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் இன்று(08) தொடக்கம் எதிர்வரும் 10 ம் திகதிவரை அதிகளவிலான மழையுடன் பலத்த காற்று வீசும். எனவே மின்தடை ஏற்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இதனைக் கொண்டு மக்கள் தயார்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீரற்ற காலநிலை தொடர்பாக அரசாங்க அதிபர் இன்று(08)அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறலின் பிரகாரம் வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் இன்று தொடக்கம் எதிர்வரும் 10 ம் திகதி வரையான சனிக்கிழமை வரையில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனவே இதன் காரணமாக இடைக்கிடையே மின்சாரத் தடை ஏற்பட வாய்ப்புகள்  காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதனைக் கருத்தில் கொண்டு தங்களது தயார்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்வதோடு வானிலை அறிக்கை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *