பேரிடருக்குப் பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

“வளமான நாடும் – அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ், நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பேரிடருக்குப் பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று(08) சம்மாந்துறை பிரதேசத்தில் நடைபெற்றன.

 

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிரின் வழிகாட்டலிலும், பிரதேச சபையின் ஏற்பாட்டிலும் இந்தச் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்களை அண்டிய பகுதிகளில் நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் சுத்தம் செய்யப்பட்டது.

 

இந்த நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், உறுப்பினர் ஹாதிக் இப்றாகீம், உள்ளுராட்சி உதவியாளர் திருமதி யூ.எஸ்.எம். சதாத், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் எம்.எம்.எம். முஸ்தபா, எம்.வி.எம். ஜெசீர், பிரதேச செயலக சுற்றாடல் உத்தியோகத்தர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இச் சிரமதானப் பணிகள் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் தொடக்கம் பெரிய பள்ளிவாசல் வரையான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *