ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் சரிகமபா பாடகர் சபேசனை கௌரவிக்கும் நிகழ்வு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தைச் சரிகமபா பாடகர் சபேசனை வரவேற்கும் மற்றும் கௌரவிற்கும் நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் இந்து இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரவியராஜ் ராசரெத்தினம் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் ஆலங்களின் அனுசரனையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது அக்கரைப்பற்று மருதையடி பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் மற்றும் ஆலயநிர்வாகத்தினரினால் மலை அணிவித்து வரவேற்பு ஆரம்பமாகி பின்னர் வாகன பவனியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் வரை அழைத்துவரப்பட்டு பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச செலகத்தின் கலாசார மண்டபத்தில் பாடகர் சபேசனுக்கு கௌரவம், நினைவுச்சின்னம் மற்றும் வாழ்த்துபா என்பன வழங்கி வைக்கப்பட்டன.

பொதுமக்கள் மற்றும் பொது அமைப்பும் ,ஊடக குழுவினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது…

மேலும் சபேசனின் தாய் தந்தையரும் குறித்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடம் இடம்பெற்றதுடன் ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்களும் இந் நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *