ராம் கராத்தே தோ சங்கத்தின் மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சை

ராம் கராத்தே தோ சங்கத்தின் மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சை ஆர்கேஓ சங்கத்தின் பிரதம போதனாரியர் தலைமையில் ராம் கராத்தே தோ சங்கத்தின் மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சை அக்கரைப்பற்று ராமகிருஷ்ண மிஷன் மஹா வித்தியாலத்தில் சங்கத்தின் பிரதம போதனாசிரியரும் பிரதம பரீட்சகருமான சேஹான் கேந்தரமூர்த்தி கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

 

இத்தரப்படுத்தல் பரிட்சையில் சங்கத்தின் ஆலையடிவேம்பு கிளையைச் சேர்ந்த 75 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் ராம் கராத்தே தோ சங்கத்தின் தலைவர் சேஹான் சந்திரஸிங்கம் கந்தசாமி, கல்முனை கிளையின் போதனாசிரியர் முரளீஸ்வரன் மற்றும் திருக்குமார், மட்டக்களப்பு கிளையின் போதனாசிரியர் வேர்ல், சங்கத்தின் பயிற்றுவிப்பாளர்கள், கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட கறுப்பு பட்டி வீரர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *