மட்டக்களப்பு – பொத்துவில் புகையிரத சேவையினை 1992 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.எம். மன்சூர் ஈரான் நாட்டின் நிதியுதவியுடன் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்ததுடன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமதாசவும் இந்த சேவைக்கான அனுமதியினை வழங்கினார்.
1993 ஆம் ஆண்டு ஈரான் அரசின் பொறியியலாளர் நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்து மட்டக்களப்பு – பொத்துவில் புகையிரதப் பாதையை அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான திட்ட வரைபுகளை பூர்த்தி செய்து மட்டக்களப்பு – பொத்துவில் புகையிரத பாதையினை ஆரம்பிக்கவிருந்த சந்தர்ப்பத்தில் 1994 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை புகையிரத சேவையினை விஸ்தரிப்பது தொடர்பாக நான் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன்.
எங்களின் மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் எங்களிடம் சொல்வார்கள் “நீங்கள் கனவு காண்பது என்றால் பிச்சைக்கார கனவு காணக்கூடாது உயர்ந்த நிலையில் கனவுகளை காணுங்கள்” என்று சொல்வார்.
அமைச்சர் பிமல் ரத்னாயக்கவிடம் இதுவரை 03 சந்தர்ப்பங்களில் மட்டக்களப்பு – பொத்துவில் புகையிரத சேவை விஸ்தரிப்பு தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளேன்.
01வது பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்ததும் தலையில் கையை வைத்து எங்களின் அரசாங்கத்தின் 05 வருட கால நிதியினை ஒதுக்கினாலும் இத்திட்டத்திற்கு நிதி போதாது என்று சொன்னார்.
02வது தடவை ஈரான் நாட்டு நிதியுதவியுடன் திட்டத்தை முன்னெடுக்க இருந்த நிலையில் யுத்த சூழ்நிலையால் இடைநிறுத்தப்பட்டது என்று சொன்னவுடன், இப்போது நான் இதனை தலைக்குள் எடுக்கிறேன் என்றார் என்னிடம்.
03வது தடவையாக நான் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் வரை புகையிரத சேவை விஸ்தரிப்பு தொடர்பான எனது முன்மொழிவுகளை சமர்ப்பித்தேன்.
இலங்கை புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையான புகையிரத சேவை விஸ்தரிப்பு தொடர்பான கருத்திட்டம் இதுவரையும் திட்டமிடப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் அவ்வாறான கருத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் மட்டக்களப்பு – பொத்துவில் புகையிரத சேவை விஸ்தரிப்பினை நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடு உள்ளது என தெரிவித்தார்.
இது தொடர்பான அறிக்கையின் பிரதியை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்.
போக்குவரத்து அமைச்சின் வெளிநாட்டு உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் மட்டக்களப்பு – பொத்துவில் புகையிரத பாதை நீடிப்பு திட்டங்களையும் உள்வாங்க வேண்டும்.
அண்மையில் ஈரான் நாட்டு தூதுவர் இலங்கையின் நீர்ப்பாசனம், போக்குவரத்து துறைகளுக்கு ஈரான் நிதி உதவி வழங்கும் என தெரிவித்தார்.
எனவே, வெளிநாட்டில் நிதி பெரும் விடயத்தில் முஸ்லிம் நாடுகளிலிருந்து பெரும் விடயத்தில் எங்களால் முடிந்தளவு ஒத்துழைப்பு வழங்குவோம். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரையில் இந்த விடயமாக குரல் கொடுத்துக் கொண்டேயிருப்பேன்.
மேல் மாகாணத்தை விட அம்பாறை மாவட்டத்தில் அதிகமாக கிராமிய வீதிகள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளன.
கிராமிய பாலங்கள், வீதிகள் நிர்மாணிப்பு பணிகளுக்கு விசேட நிதியினை ஒதுக்க வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் விமல் ரத்னாயக்கவின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கடந்த அரசாங்கத்தில் தற்காலிகமான முறையில் கல்முனை டிப்போவுடன் இணைக்கப்பட்ட சம்மாந்துறை இலங்கை போக்குவரத்து சபையின் உப-டிப்போவை சம்மாந்துறையில் இயக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்தோம்.
மீண்டும் சம்மாந்துறை உப-டிப்போவை கல்முனையிலிருந்து இயக்க வைக்குமாறு பணிப்புரை வழங்கியிருந்தீர்கள். அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் என்னால் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட போது அமைச்சரால் பணிப்புரை வழங்கப்பட்டு சம்மாந்துறை உப-டிப்போ மீண்டும் சம்மாந்துறையில் இயங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அது தொடர்பாக போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் அறிக்கையின் பிரதியினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா சம்மாந்துறைக்குச் சென்று டிப்போ காணியினை துப்புரவு செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.
இதுவரையும் எழுத்து மூலம் சம்மாந்துறை உப-டிப்போவை செயற்படுத்த பணிப்புரை வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, அமைச்சர் சம்மாந்துறையில் வாழும் 82 ஆயிரம் மக்களின் நன்மை கருதி அவர்களின் போக்குவரத்து வசதிக்காக சம்மாந்துறை உப-டிப்போவை மீளவும் சம்மாந்துறையில் இயங்க வைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நமது நாட்டின் வரலாற்று அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் நாம் மரணித்த பின்னரும் நமக்கு நன்மை கிடைக்கும் செயற்பாடுகளும் அமைந்துள்ளன என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, வீடமைப்பு, நீர்வழங்கல் மற்றும் கிராமிய மின்சார அமைச்சராக 2008 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை முழு கிழக்கு மாகாண மக்களுக்கும் வரலாற்று அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் யுத்த சூழ்நிலை காரணமாக பிரிந்து வாழ்ந்த மூவின மக்கள் மத்தியிலும் அபிவிருத்தி ஊடான இன ஒற்றுமையை கிழக்கு மாகாணம் முழுவதும் கட்டியெழுப்ப எனக்கு இறைவன் ஒரு சந்தர்ப்பத்தை தந்தான்.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் வேதத்தீவு – மஜீத் புறம் என்ற மீள்குடியேற்ற கிராமம் ஒன்றை நான் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த கால கட்டத்தில் உருவாக்கிக் கொடுத்தேன்.
வீடுகள், பாதைகள், மின்சார வசதிகள், பாடசாலை கட்டிடம், வாழ்வாதார உதவிகள் வழங்கியதுடன் கிராமத்தின் முக்கிய தேவையான பெரிய சேவையையும் வழங்கி வைத்தோம்.
சென்ற அரசாங்க காலத்தில் கிராமத்திற்காக பாலம் நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளை நெடுஞ்சாலைகள் அமைச்சும் திருகோணமலை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்கொண்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் இப்பாலம் நிர்மாணிக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, ஏழை மக்கள் வாழும் மூதூர் வேதத்தீவு – மஜீட் புறம் மக்களின் நன்மை கருதி

