காத்தான்குடி பிரதேச செயலகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும்

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் வழிகாட்டலுக்கமைவாக சமுர்த்தி தலைமையக முகாமையாளரும், நலன்புரிச்சங்கத்தின்  தலைவியுமான ஜெயராஜ் தலைமையில் 10 ஆம் திகதி மருதமுனை தனியார் விடுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலாளராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற  களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றி தற்போது பட்டிப்பளை பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றும் சித்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கணக்காளர் முப்லி, நிருவாக உத்தியோகத்தர் றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் ஜரூப், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர்களின் விளையாட்டுகள், பாட்டு மற்றும் பட்டிமன்றம் போன்ற கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

பிரதேச செயலகத்தில்  கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள், இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள், ஐந்தாம் தர புலமைப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த. சாதாரன தரத்தில்  9ஏ சித்திகள் மற்றும் க.பொ.த. உயர் தரத்தில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் ஆகியோரை பாராட்டி கௌரவித்து நினைவுச்சின்னங்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *