வன்கோவ் கணனி முறைமையினை வடிவமைத்தவர்களுக்கு அரசாங்க அதிபரினால் கெளரவம்

வன்கோவ் கணனி முறைமையினை வடிவமைத்தவர்களுக்கு  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜால் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று(13) கெளரவம் வழங்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கிளின் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களினால் உருவாக்கப்பட்ட ஒன்கோவ் கணனி முறைமையானது  நடைமுறைப்படுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மக்கள் சேவையை வினைத்திறனாக செயலாற்றும் வகையில் மாவட்ட செயலகத்திற்கும் மற்றும் 14 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குமான ஒன்கோவ் கணனி முறைமை மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அலுவலக  நடைமுறையினை இலகுபடுத்தும் முறையில் மனித வளமுகாமைத்துவம், கடித முகாமைத்துவ முறைமை, கையிருப்பு முகாமைத்துவ முறைமை, கணனி உதவிச்சேவை, முன்பதிச்சேவை போன்ற இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட பல சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகத்தர் திருமதி லக்சிகாவின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் கீழ், 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான ஒன்கோவ் முறைமை தொடர்பான செயற்பாட்டு விளக்கங்கள் மற்றும் செயற்பாட்டு பிரச்சினைகள் தொடர்பாக  தகவல் தொழில்நுட்ப உதவியாளர் நிமாஜினி  மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நிமல்ராஜ் ஆகியோரினால் செயல்முறையிலான தெரிவூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவி பணிப்பாளர் சிந்தா முபாஸ், மைக்ரோசொப்ற் நிறுவனத்தின் பயிற்சியாளர்களின் ஆசிய பிராந்திய தலைவர் விக்னராஜ் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *