திருக்கோவில் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான சத்தியபிரமாண நிகழ்வு

இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான சத்தியப்பிரமாணநிகழ்வு இடம்பெற்றது

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான உறுதி மொழி சத்தியப்பிரமாண மாவட்ட இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலாளர் கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

அறநெறி கீதம் இசைத்தலுடன் தேசிய கொடியேற்றல் மற்றும் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு ஆரம்பமாகியது.

அதனைத் தொடந்து உறுதி மொழி எடுத்தல் மற்றும் அதிதிகள் உரைகள் என்பன இடம்பெற்றதுடன் அறநெறி ஆசிரியர்களுக்கான குறிப்பேடுகளில் கையொப்பம் இடும் நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது….

இந் நிகழ்வில் மாவட்ட கலாசாரப்பிரிவின் மாவட்ட உத்தியோத்தர் ஜெயராஜி, திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர் ரெட்ணம் சுவாகர் மற்றும், மாவட்ட பதிவாளர் பிரதீப், திருக்கோவில் பிரதேச செயலக கிராம சேவையாளர்களுக்கான நிர்வாக உத்தியோத்தர் மனோகரன், திருக்கோவில் பிரதேச இந்து சமய கலாசார உத்தியோத்தர் நிஷாந்தினி தேவராஜ், காணிப்பிரிவு உத்தியோகத்தர் கோவிந்த சாமி, ஆன்மீக சொற்பொழிவாளர் சனாதனன், பிரதேச செயலக உத்தியோத்தர்கள் மற்றும் அறநெறிபாடசாலைகளின் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *