மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தினரினால் அவசர அனர்த்த நிலைமைகளில் பயன்படுத்தும் உபகரணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் நேற்று(13) கையளித்தனர்.
மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கஜனால் இயந்திர அரிவால் உபகரணங்கள் இதன் போது அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சியாத் மற்றும் மாவட்ட தகவல் அதிகாரி ஜீவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த வருடம் அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தினால் கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு இயந்திரப் படகு வழங்கி வைத்திருத்தமை குறிப்பிடத்தக்கது.

