டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கும் அவர்களின் வீடுகளைப் புனரமைப்பதற்கு அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை என்று கூறி தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்று நேற்று(13) மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகில் தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் குழுவே குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலையில் உள்ள லோகில் தோட்ட நுழைவாயிலுக்கு அருகில் குறித்த போராட்டம் நடைபெற்றது.

