மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோய் அபாயத்தை குறைத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் ஈ.எம்.டபில்யூ.ஜி. திசாநாயக்கவின் பங்குபற்றுதலுடன் சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் (13) ஆம் திகதி இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட தொற்றா நோய்த் தடுப்புப் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ருதேசனால் மாவட்டத்தில் புற்றுநோய் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பான அளிக்கை செய்து தெளிவூட்டல்களை மேற்கொண்டார்.
புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் மேற்கொண்டு நோயின் பாதிப்பு தொடர்பான விளக்கங்கள் வழங்குவதினால் புற்று நோய் பாதிப்பில் இருந்து தவிர்த்துக்கொள்வதற்கும் மற்றும் ஆரம்பக் கட்டத்திலேயே புற்று நோயை கண்டு அவற்றுக்கான சிகிச்சை வழக்குவதனால் இறப்பு விகிதத்தை குறைத்துக் கொள்ள முடியும் என இதன் போது நிபுணர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.
இரசாயணங்களினால் உற்பத்தி செய்யப்படும் வாசனை பொருட்கள், முறையற்ற உணவு பழக்க வழக்கம், புகைத்தல் மற்றும் புகையிலை, பொலித்தின் பாவனை போன்ற பொருட்களின் பாவனைகளினால் புற்றுநோய்த் தாக்கம் ஏற்படுவதற்கான காரணிகளாக காணப்படுகின்றன.
மாவட்டத்தில் கதிர் இயக்க அதிகாரிகள் குறைபாடுகள் காணப்படுவதனால் நோயாளிகளின் பரிசோதனை அறிக்கைகள் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுவதை மாகாண செயலாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் எனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு வாய் புற்று நோய் காணப்படுவதாக புற்று நோய் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.கரன், வைத்திய நிபுணர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், உயர் வைத்திய அதிகாரிகள், பணிப்பாளர்கள், துறை சார் நிபுணர்கள், மட்டக்களப்பு வர்த்தக சம்மேளனத்தின் உறுப்பினர், மட்டக்களப்பு புற்றுநோய் சங்க உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர்கள் மற்றும் பிரமுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் அதிகளவான நபர்கள் புற்று நோயிலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுவதனை முன்னிட்டு புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக பிராந்திய சுகாதார பணிமனையினால் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த மாகாண சுகாதார பணிப்பாளர் கிராம மட்டத்தில் இருந்து புற்றுநோய் மற்றும் கண் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுப்பதாக இதன் போது தெரிவித்தார்.
இதன் போது கலந்து கொண்ட துறைசார் நிபுணர்களினால் மாவட்டத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்திவதற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

