தச்சன், தையல் தொழில் செய்வோர் மற்றும் பயிர்ச்செய்கை செய்யும் சமுர்த்திப் பயனாளிகளுக்கு அரசினால் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(19) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்த உபகரணங்களை வழங்கி வைத்தார்.
1.5 மில்லியன் ரூபா அரசின் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில், நிந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லத்தீப், உப பிரதேச செயலாளர், சமுர்த்தி தலைமைப் பீடம், அதன் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்களான சம்சுன் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

