இதன் போது மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் தோட்டத்தின் முறைமையினூடாக பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு மற்றும் இவ்வருடங்களில் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கடந்த வருடம்14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 490 பயனாளிகளினால் வீட்டுத் தோட்டத்தின் முறைமையினூடாக பாடசாலை போசாக்குத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இத் திட்டத்தினூடாக மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களில் உள்ள 331 பாடசாலைகளைச் சேர்ந்த 48819 மாணவர்கள் நஞ்சற்ற போசாக்கான உணவினைப் பெற்றுக் கொள்கின்றமை குறிப்பிட்டத்தக்கது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புகான கூட்டாண்மை செயலகத்திற்கான பணிப்பாளர் நிலந்தி பெரெரா, பிரதம கணக்காளர் காயத்திரி ரமேஷ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான நவநிதன், நிர்மலராஜ், வலயக் கல்விப் பணிப்பார்கள், விவசாயத்திணைக்கள மற்றும் சுகாதார திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக கணக்காளர், உலக உணவுத்திட்ட மாவட்ட இணைப்பாளர் சிவசங்கர் மற்றும் உலக உணவுத்திட்ட விடய உத்தியோகத்தர் வாகீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத் திட்டத்தின் மூலம் உள்ளூர் முட்டை உற்பத்தி செய்பவர்களுக்கு கோழித்தீன் விலை அதிகரிப்பு பாரிய சவாலாக காணப்படுவது இதன் போது சுட்டிக் காட்டப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த நாட்டுக்கான பிரதி பணிப்பாளர் இத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது முறையான கண்காணிப்பு அவசியம் என்பதுடன் ஸ்மார்ட் விவசாயத்தினை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

