அம்பாறை காரைதீவு புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் பூஜை அறையில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் இளைஞன் ஒருவன் நேற்று முன்தினம்(21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் பணிப்புரைக்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் அன்று(21) மாலை ஒப்படைக்கப்பட்டது.
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த காரைதீவு -12 பிரதான வீதியைச் சேர்ந்த 24 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இளைஞனின் மரணம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

