திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று(24) திருகோணமலை உவர்மலை லோவர் வீதியில் உள்ள உவர்மலை பூங்காவில் மாலை 6.00 மணிக்கு  அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட  ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சுகிர்தராஜனின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும்  ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *