பாரம்பரிய முறையில் நெல் அறுவடையினைத்தொடர்ந்து ஆரம்பமான நிகழ்வில் கிராமிய பாடல் நடனங்களுடன் மாட்டு வண்டியில் புதிர் நெல் எடுத்து வரப்பட்டு, நெல்குற்றி புத்தரிசியினை அதிதிகளினால் இட்டு பொங்கி சூரிய பகவானுக்குப் படைத்து வழிபட்டனர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குணநாதன், கிழக்கு மாகாண அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர் ரங்கதான், உதவி பிரதேச செயலாளர், மேலதிக கல்வி பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் தமிழர் பாரம்பரிய தைப்பொங்கலை எடுத்துக் கூறும் சிறார்களின் கண்கவர் பல் வகை நடனங்கள், நாட்டுப்புற நடனங்கள் என்பன இடம்பெற்றன.
இதன் போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் எமது பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதுடன் பழையன கழிதல் புதியன புகுதல் என்பதுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு கோலம், பூமாலை கட்டுதல், மாட்டுவண்டி போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கான பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
மாகாண பொங்கல் விழாவில் தித்திக்கும் 15 வகையான பொங்கல் சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டதுடன், நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கி வைக்கப்பட்டது.

