மாளிகாவத்தை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் பணிநீக்கம் குறித்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தயாராக இருப்பதாக கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மேற்கொண்ட சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் கடந்த 21ஆம் திகதி சுகாதார பிரதி அமைச்சரிடம் தெரிவித்திருந்தது.
இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தயாராக இருப்பதாக கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

