அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருதும் கௌரவமும் வழங்கி வைக்கப்பட்டது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் மாவட்ட செயலகமும் திருக்கோவில் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலைஞர்களுக்கான 2025 ஆண்டு கலைஞர் சுவதம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் நேற்று திருக்கோவில் பிரதேச செயலாளர் கஜேந்திரனின் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோத்தர் திருமதி நிரோஜினி நவநீதனின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மூன்று கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் சுவதம் விருதும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜெகராஜன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் றின்கான், திருக்கோவில் உதவிப்பிரதேச செயலாளர், அலுவலக உத்தியோத்தர்கள் மற்றும் கலாசார உத்தியோத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

