மருதங்கேணி பொலிஸ் மற்றும் இராணுவத்தால் விசேட சிரமதான நடவடிக்கை

யாழ் வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதி முழுவதும் இன்று(03) காலை 8:30மணி முதல் மருதங்கேணி பொலிஸ் மற்றும் இராணுவத்தால் விசேட சிரமதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இச் சிரமதானத்தின் போது வடமராட்சி கிழக்கு கடல் தொழில் சங்கங்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தனர்.
சிரமதானத்தின் ஆரம்பத்தில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் மற்றும் வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் தங்கரூபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக நாளை மர நடுகை மற்றும் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகள் இடம்பெறவுள்ள குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *