ஒட்டுசுட்டானில் யானை வேலியில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் அலகரை, பகுதியில் யானைகளில் இருந்து பாதுகாப்புப் பெற சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட யானை வேலியில் மின்சாரம் தாக்கி மோகனராசா லோயிதன் (வயது-4) எனும் சிறுவன் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து குறித்த காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மின்சாரம் நேரடியாக வழங்கப்பட்டதாலேயே சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த சட்டவிரோத யானை வேலியை அமைத்த காணி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *