மாட்டிறைச்சி விலை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் கனகேஸ்வரன் தலைமையில் இன்று(09) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) உதவி மாவட்ட செயலாளர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் செயலாளர்கள், வருமான வரி பரிசோதகர் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாட்டிறைச்சி குத்தகைக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் பின் வரும் உள்ளூராச்சி சபைகளின்
1.நகர சபை, மன்னார்.
2.பிரதேச சபை, மன்னார்.
3.பிரதேச சபை,நானாட்டன்.
4.பிரதேச சபை,முசலி
5.பிரதேச சபை,மந்தை மேற்கு ஆகியவற்றின் மாட்டிறைச்சியின் நிர்ணய விலை (10/02/2026) முதல்
1.தனி இறைச்சி 2200 ரூபாய்க்கும்
2.முள் இறைச்சி 2000 ரூபாய்க்கும் அதில் (200 கிராம் முள்ளும் 800 கிராம் இறைச்சியும்)
3.தனி முள்ளு 1200ரூபாய்க்கும்
4.ஈரல் 2500 ரூபாய் க்கும்
விற்பனை செய்வதற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையிலும் தவிசாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களின் முன்னிலையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தனார்.
இவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் தீர்வுக்குக் கொண்டு வருவதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

