“பரசூட்”முறையில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் அறுவடை விழா

களைநெல் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த முறையும் அதிக விளைச்சல் தரும்  “பரசூட்”முறையில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் அறுவடை விழா உருத்திரபுரம் பொறிக்கடவை அம்மன் ஆலயத்திற்கு அருகில் விநாயகமூர்த்தி என்ற விவசாயின் வயலில் நடைபெற்றது.

 

உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் கராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்   பிரதம விருந்தினராக கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் தேவரதன் கலந்து கொண்டார்.

 

நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக விதை மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலையப் பிரதிப்பணிப்பாளர் சஞ்சீவன் மற்றும் கிளிநொச்சி கிழக்குப் பிரிவு  நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்வில் வடமாகாண மேலதிக விவசாயப்பணிப்பாளர் யோகேஸ்வரன், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், உருத்திரபுரம் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *