வட்டுவாகல் பாலம் புனரமைப்பு; பங்குதாரர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பாலம் புனரமைப்பு வேலை தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

குறித்த பால வேலை தொடர்பில் பங்குதாரர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம்(10) மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் பி.ப 3.00 மணிக்கு நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலானது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகள் எவ்வாறு முன்னெடுத்து செல்லப்படுகின்றது, அதனூடான போக்குவரத்து நிலைமைகள், அப்பாலத்தினை புனரமைப்பதில் உள்ள இடையூறுகள், அதனை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் இதுவரை உள்ள பணிகளின் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் குறித்த பாலத்தினூடாக சுற்றுலாத் துறையினை மேம்படுத்துதல் முதலான விடயங்கள் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர், கரைத்துறைப்பற்று திட்ட பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை
நிறைவேற்று பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் மற்றுமு ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *