புதுக்குடியிருப்பில் வெற்றிலை மென்ற மூன்று நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

புதுக்குடியிருப்பு பிரதேச சபை, பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஆகியோருடன் இணைந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் கரிகாலன் தலைமையில் பொது இடங்கள், பொது போக்குவரத்தில் வெற்றிலைமென்று துப்புபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் திடீர் சோதனை நடவடிக்கை நேற்று(12) மேற்கொண்டனர்.

குறித்த நடவடிக்கையின் போது புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பயணித்த பேருந்து, கார், முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்களை வழி மறித்து பரிசோதனை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது வெற்றிலைமென்ற மூன்று நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *