தேசிய உற்பத்தித்திறன் செயலகம் மற்றும் தொழிலாளர் அமைச்சு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய உற்பத்தித்திறன் விருது – 2025/2026ற்கான இறுதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு 2026 பெப்ரவரி 27 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
அந்தவகையில் இவ்வருடம் விண்ணப்பித்த நிறுவனங்களின் செயற்திறன், நிர்வாகத் திறன், உற்பத்தி மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தரநிலைகள் தொடர்பான மதிப்பீட்டு கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
கடந்த ஆண்டுகளில் (2023/2024, 2024/2025) தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் பல நிறுவனங்கள் சிறந்த செயல்திறன், புதுமை முயற்சிகள், வளங்களின் பயனுள்ள பயன்பாடு மற்றும் பணியாளர் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் பாராட்டப்பட்டுள்ளன.
அதற்கமைய இவ்வருடமும் மாவட்ட மட்டத்தில் தகுதியான நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து தேசிய மட்டத்துக்கு பரிந்துரைப்பதனை நோக்கமாகக் கொண்டு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த மதிப்பீட்டு நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டசெயலர், விண்ணப்பித்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்தின் கடந்த கால முன்னேற்றங்கள், சவால்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

