யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19ஆம் திகதி முதல் எதிர்வரும் 22ம் திகதி வரை நான்கு நாள்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விவரிப்பு இன்று திங்கட்கிழமை நண்பகல் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில், பல்கலைக்கழக சபை அறையில் நடைபெற்றது.
இதன் போது முன்னாள் கலைப்பீடாதியும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்குழுத் தலைவருமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றி விளக்கமளித்தார்.

