கல்முனை வலய கல்வி அலுவலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் முகம்மட் ஆரிப் 35 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
அதேபோன்று, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஜவ்பர் 28 வருட சேவைக்குப் பின் ஓய்வு பெற்றுள்ளார்.
இரு அதிகாரிகளுக்கும் கௌரவமாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரியா விடை நிகழ்வு கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் பிரதி கல்விப் பணிப்பாளர் ஜாபிர் தலைமையில் நடைபெற்றது.
வலய கல்விப் பணிப்பாளர் சஹுதுல் நஜீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, ஓய்வு பெறும் அதிகாரிகளின் நீண்டகால அர்ப்பணிப்பையும் நேர்மையான சேவையையும் பாராட்டிப் பேசினார். அவர்களின் சேவை கல்வித் துறைக்கு அளித்த பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கணக்காளர், பிரதி கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் பங்கேற்று, தங்களது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ரியாஜத் ஓய்வாளர்களை வாழ்த்தி சிறப்புப் வாழ்த்துப்பாவினை வடித்து வாசித்தார். இந்நிகழ்வின் நிறைவாக, ஓய்வு பெற்ற அதிகாரிகள் இருவரும் பொன்னாடை போர்த்தி, பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

