ஹிங்குராங்கொட பொலன்னறுவை பிரதான வீதியில் கொள்கலன் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி தடம் புரண்டு இன்று(23) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேகமாகச் சென்ற கொள்கலன் லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் லொறியின் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக ஹிங்குராங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

