பேடன் பவல் பிரபுவின் 169 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

உலகச் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் லோர்ட் பேடன் பவல் பிரபுவின் 169 வது பிறந்தநாள் மற்றும் உலகச் சாரணர் சிந்தனை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழா, பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு தேசிய சாரணர் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, பேடன் பவல் பிரபுவின் சிலைக்கு பிரதமர் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.
சாரணர் இயக்கம் என்பது வெறும் பதவிகளை வகிப்பதல்ல, அது தயார் நிலையில் இருப்பதற்கும் பிறருக்கு சேவை செய்வதற்குமான ஒரு உன்னதமான பயிற்சியாகும் என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அதேவேளை, ஒழுக்கமான மற்றும் புத்திசாலித்தனமான ஸ்மார்ட் சாரணர்களாக சமூகத்திற்குப் பணியாற்ற வேண்டும் என்றும், மரம் நடுதல் மற்றும் நீர் நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற சூழல்நேயச் செயற்திட்டங்கள் ஊடாக நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பங்களிப்பு வழங்குமாறும் அவர் சாரணர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இவ்விழாவில், சாரணர் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் மற்றும் முதலுதவிப் பெட்டிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, பிரதமருக்கு விசேட நினைவு முத்திரைத் தொகுப்பும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *