கற்பிட்டி முகத்துவாரம் கடற்பரப்பில் 685 கிலோகிராம் கடல் அட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி முகத்துவாரம் கடல் பகுதியில் கடற்படையினர் நேற்று நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட உலர்ந்த கடல் அட்டைகளுடன் சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் குறித்த மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகம் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

