கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பரந்தன் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று(25)கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த அகழ்வின்போது எந்தவித தடயப் பொருட்களும் கிடைக்கப்பெறவில்லை. இதனைத் தொடர்ந்து அகழ்வப்பணி இடை நடுவே கைவிடப்பட்டது. குறித்த அகழ்வுப் பணியின் போது தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

