கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் இப்தார் நிகழ்வு

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று(25) பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர், கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபைத்தவிசாளர், வாழைச்சேனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர், கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி பணிப்பாளர், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், கல்குடா ஜம்இயதுல் உலமா சபைத் தலைவர், ஸகாத் நிதியத்தின் தலைவர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், பிரஜா சக்தி தலைவர்கள், வாழைச்சேனை வர்த்தக சங்கத்தலைவர், தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டாளர்கள், பிரஜா சக்தியின் இணைப்பாளர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்கம் ஏற்பாடு செய்த இவ் இப்தார் நிகழ்வில் ரமழான் தொடர்பான சிறப்புரையினை ஏ.எம்.இஸ்ஸத் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *