கடந்த கால ஆட்சி அரசாங்கத்தினால் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தாங்கள் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற குறிக்கோளுக்கு அமைவாக அமைக்கப்பட்ட வீடுகள் இடை நடுவே கைவிடப்பட்டுள்ளன.
இருப்பினும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக காணப்படும் அவ்வீட்டு திட்டங்களை நாம் பொறுப்பேற்று அவற்றை செயல்படுத்த நிதி திட்டங்களை வழங்க உள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு தெரிவித்தார்.

