கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பைரூஸ் மேற்கொண்டுள்ள சேவைக்கு பிரதேச மக்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட எம்.பி.சீ.எஸ் பின் வீதியின் பிரதான வடிகான் மூடி நீண்ட காலமாக சேதமடைந்து காணப்பட்டது.
இவ்வீதியால் பயணிப்போர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்த நிலையில் சமூக ஊடகங்களிலும் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இவ்விடயத்தை கவனத்திலெடுத்த முன்னாள் தவிசாளர் பைரூஸ் தனது முயற்சியால் இவ்வேலைத்திட்டத்தை இன்று(27) மேற்கொண்டார்.
புனித ரமழான் மாதத்தில் இரவு நேரத்தொழுகைக்காகச் செல்லும் பெண்கள், சிறார்கள் உட்பட பலரும் பயன்படுத்தும் இம்முக்கிய வீதியைச் சீரமைத்துக் கொடுத்தமைக்காக முன்னாள் தவிசாளருக்கு பிரதேச மக்கள் பிரார்த்தனைகளையும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

