தற்போது நாட்டுக்குத் தேவையான போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது.
எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லையென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் காணொளியொன்றினை வெளியிட்டுள்ளார்.
எரிபொருள் கையிருப்பு இருப்பதால், தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

