வார வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அருட்திரு பங்காரு அடிகளாரது 86 ஆவது அவதார பெருமங்கல விழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு களுவன்கேணி வீதி வந்தாறுமூலையில் அமைந்துள்ள வார வழிபாட்டு மன்றத்தில் இன்று பிரதேச மக்கன் நன்மை கருதி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.

இவ் நிகழ்வில் மலையகம் மற்றும் வட மாகாணத்தைச் சேர்ந்த சக்தி அடியார்கள் கலந்து கொண்டு அன்னை ஆதிபராசக்தியின் அருளைப் பெற்றனர்.

இன்றைய வேள்வி பூஜையை ஆதிபராசக்தி அறநெறி பாடசாலை மற்றும் வார வழிபாட்டு மன்ற நிறுவனர் சக்தி சுவிஸ் சுரேஷ் அவர்கள் நடாத்தினார் .

 

நாளை மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றமும் ஆதிபராசக்தி அறநெறி பாடசாலையும் அமைந்துள்ள புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றவுள்ளது.

இந்நிகழ்வினை

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலம் பண்பாடு அறப்பணி மையம் (swiss) ஏற்பாடு செய்துள்ளனர்.

அறப்பணி கட்டிடத்தை ஆதிபராசக்தி அறநெறி பாடசாலை மற்றும் வார வழிபாட்டு மன்ற நிறுவனர் சக்தி சுவிஸ் சுரேஷ் அவர்களின் கரங்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதற்கான நிதி அனுசரணை லண்டன் ஈஸ்ஹாம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலம் பண்பாடு வார வழிபாட்டு மன்றம் வழங்கியிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *