அனைத்து எரிப்பொருள் நிரப்பும் நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் நாளை அதிகாலைக்குள் கிடைக்கப்பெறும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று வங்கி விடுமுறை என்பதால் கடன் அடிப்படையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
தொடர் விடுமுறை என்பதால் நாளை வரை தேவையான அளவு எரிபொருள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

