மத்திய கிழக்கில் போர் பதற்றம்; இஸ்ரேல், கட்டார் எரிவாயு உற்பத்தி நிறுத்தம்

இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேலின் பிரம்மாண்டமான எரிவாயு தளங்கள் மற்றும் கட்டாரின் திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள இஸ்ரேலின் மிகப்பெரிய எரிவாயு தளமான லெவியதன் தளத்தில் உற்பத்தியை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தளத்தை இயக்கி வரும் அமெரிக்காவின் செவ்ரான் நிறுவனம், அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

ஈரான் உடனான மோதல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. லெவியதன் தளம் இஸ்ரேல் மட்டுமல்லாது எகிப்து மற்றும் ஜோர்தான் நாடுகளுக்கும் எரிவாயுவை விநியோகிக்கும் முக்கிய மையமாகும்.

உலகின் முன்னணி எரிவாயு ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான கட்டாரும் தனது திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

ஈரானின் வான்வழித் தாக்குதல்கள் பிராந்தியத்தில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கட்டார் உலகளாவிய எரிவாயு விநியோகத்தில் பெரும் பங்கைக் கொண்டிருப்பதால், இந்த நிறுத்தம் சர்வதேச சந்தையில் எரிவாயு விலையை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *