ஈரானைச் சூழ்ந்துள்ள பதற்றமான சூழலில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் உடனடியாகப் போர்நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென ரஷ்யா அவசர அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஆயுத மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நிபந்தனையற்ற முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஈரான் மீதோ அல்லது ஏனைய அரபு நாடுகள் மீதோ சிவிலியன் இலக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே இந்த மோதல் தீவிரமடையக் காரணம்.
ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் ஈரான் மற்றும் அதன் அரபு அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவைச் சீர்குலைப்பதே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் நோக்கமெனவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

