முல்லைத்தீவு மாவட்டத்தின் புது குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு தொட்டியடி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் தொடர்ச்சியாக அப்பகுதியில் சிலர் மேற்கொண்டு வருவதை அவதானித்த அப்பகுதி மக்கள் அவர்களிடம் சட்டவிரோத செயற்பாட்டை நிறுத்துமாறு பலமுறை தெரிவித்தும் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் காரணமாக இப்பகுதியில் இளைஞர்கள் மற்றும் பலர் சட்டவிரோத கசிப்பினைப் பயன்படுத்திவிட்டு குடும்பத்தகராறு மற்றும் வீதியில் போக்குவரத்தில் ஈடுபடுபவருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதுவதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், சட்டவிரோத கசிப்பினைப் பயன்படுத்துவதன் காரணமாக பல இளைஞர்கள் தற்பொழுது விளையாட்டுகளிலும் பங்குகொள்ள முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.
இதனை மீட்டெடுக்கும் வகையிலும் தமது பகுதியில் இருந்து சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை முற்று முழுதாக நிறுத்தும் நடவடிக்கைளை அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் ஓர் அங்கமாக நேற்று(05) சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெற்ற பகுதியினை இளைஞர்கள் மற்றும் அப்பகுதி பொது அமைப்புகள் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
குறித்த நடவடிக்கையின் போது 600 லீற்றருக்கு மேற்பட்ட மேற்பட்ட கோடா மற்றும் கசிப்பு என்பனவற்றை மக்கள் கைப்பற்றியதுடன் குறித்த தடயப் பொருட்களை புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

