யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகாமை நேற்று முன்தினம்(04) 500 லீற்றருக்கு மேற்பட்ட மண்ணெண்ணையை சட்டவிரோதமாக வைத்திருந்த சந்தேக நபரும் அதற்குப் பயன்படுத்திய வாகனமும் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
சந்தேகத்துக்கு இணங்க அதிகளவான மண்ணெண்ணையை வியாபார நடவடிக்கைக்காகவோ அல்லது வேறு தேவைக்காகவோ பயன்படுத்துவதற்கு வாகனத்தின் மூலம் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இருந்து கடத்த முயன்ற போது பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சம்பவத்தில் ஈடுபட்டு இருந்த வாகனத்தையும் சந்தேக நபரையும் உடனடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அவரின் வாகனம் மற்றும் எரிபொருள் என்பவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இன்று(05) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

