கல்மடுக்குளத்தின் சிறுபோக அளவை தீர்மானிக்கும் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்திற்கு அடுத்த பெரிய நீர்ப்பாசன குளமாகிய கல்மடுக்குளத்தின் கீழ்  2452ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்ச்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்மடுக்குளத்தின் கீழ்  2026ம் ஆண்டுக்கான சிறுபோக அளவை தீர்மானிக்கும் கலந்துரையாடல் கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று(06) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலானது பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில்  நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பொறியியலாளர் பிரகாஸ், கமநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் மாவட்டத்திலுள்ள விவசாயத்திணைக்களங்களின்  பணிப்பாளர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *