தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு அரசாங்கம் ஆகும். நமது ஜனாதிபதியின் வெற்றிக்கு காரணம் பெண்களின் ஆதரவு அவர்களுக்காக விசேடமாகக் கொண்டுவரப்பட்ட திட்டமே பிரஜா சக்தி என மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் மகளிர் அணித் தலைவி வனிதா செல்வ பெருமாள் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்திலும் சரி உள்ளூராட்சி சபைகளிலும் பெண்களின் குரல் தற்போது ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. நமது அரசாங்கத்தின் பெண் தலைமைத்துவம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. எமது அரசாங்கம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம் அவர்கள் நேர்மையாக எடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள் என்பதை உணர்ந்து அதனையும் தற்போது செய்து காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
எமது நாட்டில் 52% பெண்களாக இருப்பதன் காரணமாக அவர்களின் ஆதரவு இல்லாமல் எதனையும் சாதிக்க முடியாது. எமது அரசாங்கத்தின் வெற்றியின் பிரதான பங்காளர்கள் பெண்களே.
பிரஜா சக்தி திட்டத்தில் பெண்களுக்கான அதிக உதவித் திட்டங்கள் அடங்கியுள்ளன. எனவே அவ்வாறான உதவிகள் வேண்டுமெனில் எமது அரசாங்கத்தினால் பெண்களுக்காக செய்ய நாம் தயாராகவே இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

