ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கல்

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று(06) சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலத்தில் நடைபெற்றது.

 

பின்தங்கிய மற்றும் வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக இன்று தெரிவுசெய்யப்பட்ட 57 மாணவர்களுக்கு பாடசாலை பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

 

பாடசாலையின் அதிபர் சுரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச் சார்பாக நவநீதன், ஹரிபிரசாத், நவநீதன் மற்றும் கிறிஸ்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *