பெண்களுக்கான வர்த்தக பொருளாதார சம்மேளனம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாரத்தினை மேம்படுத்தும் முகமாக அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாகவும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் இருக்கக்கூடிய சகல பெண்கள் அமைப்பினரையும் ஒன்றிணைக்கும் மாவட்ட பெண்கள் வர்த்தக சம்மேளனம் நேற்று(06) மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

இவ் அமைப்பின் இணை தலைவிகளான எட்வேட் கேசாயினி மற்றும் சுரேஷ் வாசுகி தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுற்றுலா அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் மகளிர் அணித் தலைவி வனிதா செல்லப்பெருமாள் கலந்து கொண்டு அமைப்பின் உத்தியோப்பூர்வ இணையத்தள செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தது.

அத்துடன் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட பெண்கள் வர்த்தக பொருளாதார சம்மேள பிரதிநிதிகளால் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சி நிகழ்வையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்விற்கு சுற்றுலா அமைச்சின் உயர் அதிகாரிகள், மாவட்ட பிரதேச செயலக உயர் அதிகாரிகள், மாவட்ட பெண்கள் வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *