திராய்மடு பிரதேசத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் அருள்ராஜின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் தினேஸ் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திராய்மடு பிரதேசத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு நேற்று(06) இடம்பெற்றது.

“முழு நாடும் ஒன்றாக” தேசிய  வேலைத்திட்டத்தின் கீழ் விஷபோதைப் பொருள் தடுப்பு வார நிகழ்வுகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு திராய்மடு பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரின் பங்குபற்றுதலுடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன.

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை 1818 எனும் இலக்கத்திற்கு வழங்குவதினூடாக போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மாவட்ட தகவல் அதிகாரி, திராய்மடு கிராமசேவகர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *